தமிழகத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்த தளர்வில்லா முழு ஊரடங்கை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனை குறித்து, நேற்றுதிருவள்ளூரில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் சங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், வாகன சோதனையின்போது, போலீஸார் மேற்கொள்ளவேண்டியவை குறித்து, அவர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து, அப்பகுதியில் வந்தவாகனங்களை மடக்கி இ - பாஸ் உள்ளதா? என்று ஆய்வு செய்தார். பிறகு, அவர், போலீஸார், முன்களப் பணியாளர்களுக்கு முகக் கவசம், கையுறை மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் 1,400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்; 40 சோதனைச் சாவடிகள் மூலம்போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக இதுவரை 2,000 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago