கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் - 1,534 பேருக்கு புதிதாக கரோனா :

By செய்திப்பிரிவு

தனி வட்டாட்சியர், செய்தியாளர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட தொலைக்காட்சி செய்தியாளர் ஜெ.கணேசமூர்த்தி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, முதலில் தனியார் மருத்துவமனையிலும், அடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதேபோன்று சின்னசேலம் தனி வட்டாட்சியர் பாண்டியன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 464 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 29,778 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 3பேர் உயிரிழந்தனர். இதுவரை 206 பேர்உயிரிழந்துள்ளனர். நேற்று 359 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் 25,990 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 355 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூலம் மாவட்டத்தில் தொற்றுஎண்ணிக்கை 18,593 ஆகஉயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 121பேர் உயிரிழந் துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 44,261 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 313 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் 36,079 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தற்போது 6,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் உயிரிழந்தனர். இதுவரை 499 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்