திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து போலீஸார் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் டி.ஐ.ஜி. முத்துச்சாமி அறிவுரையின்படி, திண்டுக்கல் எஸ்.பி. ரவளிப்பிரியா தலைமையில் போலீஸார் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டு கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 13 நான்கு சக்கர வாகனங்களிலும், 61 இருசக்கர வாகனங்களிலும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு திண்டுக்கல் டி.ஐ.ஜி. முத்துச்சாமி, மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா ஆகியோர் கபசுரக் குடிநீர், பிஸ்கட் வழங்கினர்.
பழநி பெத்தநாயக்கன்பட்டி நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 250 நபர்களுக்கு உணவுப் பொட்டலங்களை தர்மசக்கரா அறக்கட்டளை சார்பில் திண்டுக்கல் எஸ்.பி. ரவளிபிரியா வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago