தனியார் மருத்துவமனைகளில் - காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டாயம் கரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் : அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்களுக்குக் கட்டாயம் கரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜய லட்சுமி மற்றும் அதிகாரிகள், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதா வது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சி ஜன் தட்டுப்பாடு உள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக் கப்படும். தனியார் மருத்துவ மனைக்கு வருவோருக்கு அரசின் காப்பீட்டுத் திட்டத் தின் கீழ் கட்டாயம் சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு அரசு நிர்ண யித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்