வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி மற்றும் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங் கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்து வமனைகளிலும் சாதாரண படுக்கை முதல் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், அதி தீவிர சிகிச்சைக்கான வார்டுகளை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 750 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் ஏற்கெனவே இயங்கி வருகிறது. அங்கு தற்போது 245 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 50 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பணிகள் நிறை வடைந்து தற்போது 50 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதைத்தொடர்ந்து, 50 ஆக்சிஜன் ‘கான்சென்ட்ரேட்டர்கள்’ அங்கு வழங்கப்பட்டுள்ளன. அவசர தேவைக்கென பிரத்யேக 108 ஆம்புலன்ஸ் வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் மிதமான ஆக்சிஜன் தேவை ஏற்படும் நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது," வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப் பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் குறைவான பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலையில் யோகா மற்றும் மூச்சு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கரோனா நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் வழங்கப்படு கிறது. லேசான மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு இந்த மையத்தில் சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் 50 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தற்போது, இங்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூச்சுத் திணறல் அதிகமாக உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது’’ என்றனர். இதற்கிடையே, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த அரசு மருத்துவமனை வளாகத்தில் அரங்கம் அமைக்கும் பணிகளையும், ஆக்சிஜன் கொள்கலன் செயல்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் செல்வி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், குடியிருப்பு மருத்துவ நல அலுவலர் இன்பராஜ், உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago