மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க - கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : தனியார் மருத்துவமனைகளுக்கு திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘கரோனா தொற்றுள்ள அனைத்துநோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கு அரசு மருத்துவரின் பரிந்துரை படிவம் தேவை இல்லை.

தீவிரமில்லாத கரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ஒரு நபருக்கு மொத்த சிகிச்சைக் கட்டணமானது ஏ3 முதல் ஏ6 வரை தர வரிசையுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.5,000 மட்டும் கட்டணம். ஏ1 மற்றும் ஏ2 தர வரிசையிலுள்ள மருத்துவமனைகளுக்கு ரூ.7,500, ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ஒரு நபருக்கு மொத்த சிகிச்சை கட்டணம் ரூ.15 ஆயிரம் எனவும் அரசு நிர்ணயித்துள்ளது.

அதிதீவிர கரோனா சிகிச்சை மூன்று வகைப்படுத்தப்பட்டு, வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ஒரு நபருக்கு மொத்த கட்டணம் ரூ.35 ஆயிரம், ஊடுருவாத வெண்டிலேட்டர் வகை சிகிச்சைக்கு ரூ.30ஆயிரம், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரம் எனவும் அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அரசால்நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்கவேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால், தொடர்புடைய தனியார்மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்