சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதற்கான அறிகுறியுடன் உள்ளோர் என 650-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் கரோனா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் 25-க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர்.
இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனை அருகேயுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையில் எரியூட்டப்படுகின்றன. இங்கு எரியூட்டும் பணியை தனியார் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.
மேலும் உடலை எரியூட்ட நகராட்சி ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூல் செய்கிறது. இதுதவிர எரியூட்டும் ஊழியர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாகப் பணம் கொடுத்தால் மட்டுமே எரியூட்டுகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் ஐயப்பன் கூறுகையில், ‘‘நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகப் பணம் வசூலிக்கக் கூடாது. மீறினால் தொண்டு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago