திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை :

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 40 மி.மீ. மழை பதிவானது. சேர்வலாறு, ராதாபுரத்தில் தலா 15 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 12, களக்காட்டில் 7.40, நாங்குநேரியில் 6.50, சேரன் மகாதேவியில் 5.20 , கொடு முடியாறு அணையில் 5, பாளையங்கோட்டையில் 4, மணிமுத்தாறு, திருநெல் வேலியில் தலா 3.20, மூலக்கரைப்பட்டியில் 2 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,263 கனஅடி நீர் வந்தது. 255 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 110.85 அடியாக இருந்தது. சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 124.01 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 109 கனஅடி நீர் வந்தது. 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 84.60 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 42.49 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 20.75 அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அடவிநயினார் அணையில் 21 மி.மீ., தென்காசியில் 12.60, குண்டாறு அணையில் 8, ஆய்க்குடியில் 6.40, ராமநதி அணை, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரியில் தலா 5 மி.மீ., கடனாநதி அணையில் 4 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணையில் நீர்மட்டம் 64.50 அடி, ராமநதி அணையில் 49.50 அடி, கருப்பாநதி அணையில் 50.18 அடி, குண்டாறு அணையில் 30.12 அடி, அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 45 அடியாக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE