திருவாரூர் மாவட்ட கிராமப்புறங்களில் கரோனா பரவலைத் தடுக்க - வீடு, வீடாகச் சென்று தொற்று அறிகுறிகள் குறித்து பரிசோதனை : கலந்தாய்வுக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் கரோனா 2-ம் கட்ட பரவலை தடுக்கும் வகையில், தினந்தோறும் வீடு வீடாகச் சென்று, கரோனா தொற்று அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியர் வே.சாந்தா முன்னிலை வகித்தார். இதில், எஸ்.பி அ.கயல்விழி, நாகை எம்.பி எம்.செல்வராஜ், எம்எல்ஏக்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங் கலம் பாலு மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது: திருவாரூர் மாவட்டத்தில் 131 நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. இதில், கிராமப்புறங்களில் 90 பகுதிகளும், நகர்ப்புறத்தில் 41 பகுதிகளும் உள்ளன. இன்று(நேற்று) வரை 4,82,431 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறிய 21,638 நபர்களுக்கு அபராதம் விதிக் கப்பட்டு, ரூ.45,80,850 வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் மே 22-ம் தேதி வரை கரோனா தொற்றால் மொத்தம் 24,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 19,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். 163 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 4,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 56,238 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா முதற்கட்ட நிவாரணத் தொகையாக 3,70,076 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.74,01,52,000 வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் கரோனா 2-ம் அலை பரவலைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்று அறிகுறிகள் உள்ளதா என களப் பணியாளர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவையை தினந்தோறும் மருத் துவர் குழு கண்காணித்து, போதிய அளவு ஆக்சிஜனை இருப்புவைத்துக்கொள்ள அறி வுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்