புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி ஊராட்சி களக்குடி, உடும்பன்கொல்லை போன்ற பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால், டிவி, மிக்ஸி, மின்விளக்குகள் போன்ற ஏராள மான மின்சாதன பொருட்கள் பழுத டைந்துவிட்டன. மேலும், அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் மின் அழுத்த பிரச்சினை தீர்க்கப்படா ததால், பழுதடைந்த மின்சாதன பொருட்களுடன் அப்பகுதி இளைஞர்கள் நாகுடி மின்வாரிய அலுவல கத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
பின்னர், மின்சாரம் சீராக விநியோகிக்கப்படும் என மின்வாரிய அலுவலர்கள் உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு இளைஞர்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago