திருவாரூரை அடுத்த கடாரம் கொண்டான் பகுதியைச் சேர்ந் தவர் சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதி(30). இவரது கணவர் விஷ்ணுபிரகாஷ் அமெரிக்காவில் பணியாற்றி வருகி றார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அமெரிக் காவில் கணவருடன் வசித்து வந்த ஜெயபாரதி, கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக, அவரைப் பிரிந்து குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். தற்போது, தப்பளாம்புலியூரில் உள்ள அஞ் சல் நிலையத்தில் எழுத்தராக பணி யாற்றி வந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு விஷ்ணு பிரகாஷுக்கு ஜெயபாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்சினையால் அமெரிக்காவில் தனக்கு வேலை போய்விடும் என்றுகூறி, விவாகரத்து நோட்டீஸை வாபஸ் பெறும்படி விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள், ஜெயபாரதி மற்றும் அவரது பெற்றோரை தொலைபேசியில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி மதியம் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் ஜெயபாரதி வீடு திரும்பியபோது, மினி வேன் மோதியதில் உயிரிழந்தார். இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெயபாரதியின் தந்தை அளித்த புகாரின்பேரில், திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.
விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு களை ஆய்வு செய்தபோது, ஜெயபாரதி மீது மோதிய மினிவேன், நீண்ட தொலைவுக்கு அவரை பின்தொடர்ந்து வந்தது பதிவாகியி ருந்தது.
இதையடுத்து, ஜெயபாரதி திட்டமிட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என கருதிய போலீஸார், திருவாரூரை அடுத்த பவித்திரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த மினிவேனின் உரிமையாளரைப் பிடித்து, விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago