ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்யும் வகையில் ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 235 மூத்த குடிமக்கள் வசிக்கின்ற வீடுகள் கண்டறியப்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் மூத்த குடிமக்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட வற்றை காவல் துறையினர் வழங்கவுள்ளனர்.
இதற்காக பிரத்யேகமாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் 94981-80972 என்ற எண் தொடங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி ஆகியவற்றை வாங்க பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். இவற்றை தெருக்களில் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
எனவே, உரிய காரணங்கள் இல்லாமல் வெளியே வரும் பொதுமக்கள் மீது அபராத வழக்கு கள் பதிவு செய்வதுடன் வாகனங் கள் பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago