புதிதாக 2,209 பேருக்கு : கரோனா தொற்று உறுதி :

By செய்திப்பிரிவு

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங் களில் புதிதாக 2,209 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 544 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை சராசரி பாதிப்பு எண்ணிக்கை 700-ஆக இருந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்திருந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 659 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைகளில் 4,761 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 1,006 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,485-ஆக உயர்ந்துள்ளது. 28,882 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 382-ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்