அவிநாசி, சேவூர் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்லும் இளைஞரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவிநாசி அருகேதேவராயம்பாளையம் பகுதியைச்சேர்ந்தபஷீர்முகமது (எ) சிராஜ் (36), கரோனாவால் பாதிக்கப் பட்டோரை தனது ஆட்டோவில் மருத்துவ மனைக்கு இலவசமாக அழைத்துச் செல்கிறார்.
இதுதொடர்பாக சிராஜ் கூறும்போது, "மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் நான்.கரோனா சூழலில் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். ‘அவிநாசி கோவிட் இணைந்த கரங்கள்’ அமைப்புடன் இணைந்து, நாள்தோறும் ஆட்டோவில் சென்று கபசுர குடிநீர் வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறேன். தற்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கோ அல்லது வீட்டுக்கோ அழைத்துச் செல்லும் பணிக்காக, மிகக் குறைந்த தொலைவு இடத்துக்கு ஆம்புலன்ஸில் அதிகபட்ச வாடகை கேட்கின்றனர்.
குறிப்பாக, தனியார் ஆம்புலன்ஸ்கள் அவிநாசி - திருப்பூருக்கு தொற்றாளர்களை அழைத்துச் செல்ல ரூ.5 ஆயிரம் வரை கேட்கிறார்கள். இதுபோன்று பல்வேறு இடங்களில் நடப்பதை அறிந்து, கடந்த ஒருவாரமாக கரோனா தொற்றாளர்களை இலவசமாக அழைத்துச் செல்கிறேன். என்றார்.
அவிநாசி, சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர் களை மருத்துவமனைக்கு ஆட்டோவில் இலவசமாக அழைத்து சென்று வருகிறேன். என்னை எந்த நேரத்திலும் 99942-68319 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago