வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்களை கண்காணிக்க - சுகாதாரத் துறையினருக்கு சிறப்பு பயிற்சி :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாதொற்றால் லேசான பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கவும் சுகாதாரத் துறையினருக்கு சிறப்பு பயிற்சிகள் நேற்று அளிக்கப்பட்டன.

சிறப்பு பயிற்சிக்கு சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி தலைமை தாங்கினார். சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள் பங்கேற்றனர். தற்போது கரோனா வைரஸ் தொற்று கடுமையாக பரவி வருகிறது. பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று உறுதியான உடன் பலர் அச்சத்தில் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் இடமில்லாத சூழல் உருவாகிறது.

இந்தச் சூழ்நிலையில் கரோனா உறுதியானதும் பாதிப்பு அதிகம் இல்லாத லேசான தொற்று உள்ளவர்களை வீட்டிலே தனிமைப்படுத்தி அவர்களை கண்காணிக்கசுகாதாரத் துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உரியமருந்து மாத்திரைகள் மருத்துவர்மூலம் வழங்கப்பட்டு அவர்களது நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் என்றால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். மூச்சுத் திணறல் ஏற்பட்டால் வீட்டில் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்