கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - ஆக்சிஜன் படுக்கை வசதி போதுமானதாக உள்ளது : மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தகவல்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வார்டில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, முழு தற்காப்பு கவச உடையணிந்து சென்று கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து இருப்பு, ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள், கழிவறை வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆட்சியர் கூறியது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் கரோனா கண்காணிப்பு மையங்களும், 5 அரசு மருத்துவமனைகள், 4 தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. 565 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இதில் 511 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 54 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.

அதேபோன்று 1,850 சாதாரணபடுக்கை வசதியில் 435 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட் டத்தைப் பொறுத்தவரை படுக்கை வசதிகளிலும், சிகிச்சை முறையிலும் குறைபாடின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியையும் துரிதப்படுத்திவருகிறோம்.

கரோனா தொற்று குறித்த தகவல்கள், ஆக்சிஜன் படுக்கை வசதி இருப்பு மற்றும் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையத்தினை 04151 -228 801, 220 000 மற்றும் 94999 33834 என்ற தொலைப்பேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்

என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்