நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு வழங்க 2,000 முகக் கவசங்கள் மற்றும் 2,000 பேஷ்ஷீல்டு ஆகியவற்றை, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் ஆகியோரிடம் வனத்துறை அமைச்சர்கா.ராமச்சந்திரன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘ஒன்றிணை வோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் அனைத்துக் கட்சி பிரமுகர் களுடனும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு, பல்வேறு வழிமுறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
கரோனா தொற்று காலத்தில், |தன்னலம் கருதாமல் களப்பணி யில் ஈடுபடும் முன்களப்பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 2,000 முகக்கவசங்கள், 2,000 பேஸ்ஷீல்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1.70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆட்சியர் அலுவல கத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறையின்செயல்பாடுகளை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago