ஊரடங்கில் தேவையின்றி - வெளியே சுற்றியவர்களுக்கு கரோனா பரிசோதனை : காவல், சுகாதாரத் துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பூரில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு, போலீஸார் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் நேற்று கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு விதிக்கப்பட்டும்,மக்களின் நடமாட்டம் குறைந்தபாடில்லை. தொடர்ச்சியாக பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.

அதேசமயம், கரோனா தொற்றின் பாதிப்பும் குறையவில்லை. இந்நிலையில், இ-பதிவு இன்றியும், அத்தியாவசியத் தேவைகள் இன்றியும் வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணிக்கும் வகையில், ஆங்காங்கே தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் பழைய பேருந்து நிலையம்அருகே தெற்கு போலீஸார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸார் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டதுடன், சுகாதாரத்துறை சார்பில் வேன் மூலமாககட்டாய கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அவர்களின் முழு விவரங்களும் சேகரிக்கப் பட்டன. பரிசோதனை முடிவுகள் இரண்டு நாட்களுக்குள் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும், சுகாதாரத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதை அறிந்த பலர், வந்த வழியே திரும்பிச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்