ஈரோட்டில் நேற்று இதுவரை இல்லாத அளவு உட்சபட்சமாக 1656 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
ஈரோட்டில் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கை கொண்ட படுக்கைகள் மற்றும் தொற்றின் அளவு குறைவாகக் கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான படுக்கைகளை மாவட்ட நிர்வாகம் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் 1656 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 812 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 9722 பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 405 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த 388 பேர் குணமடைந்துள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் 3236 பேர் தற்போது கரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago