திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊரடங்கு காலத்தில் ஏற்படும் குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, முதியோர் எதிர்நோக்கும் இன்னல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மின்னஞ்சல், வாட்ஸ்-அப் மூலம்இலவச சட்ட உதவி பெற, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, பாதிக்கப்படும் பொதுமக்கள், தங்களது பெயர், பாலினம், வயது, முகவரி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, தங்களது குறைகளை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை dlsatiruvallur1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9840760576 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கவேண்டும்.
பின்னர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின்வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவரை உடனடியாக தொடர்புகொண்டு, இலவச சட்ட உதவி வழங்குவார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago