கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து - கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : அமைச்சர் மஸ்தான் சுகாதாரத் துறையினருக்கு அறிவுரை

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே நாட்டார்மங்கலம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா சிகிச்சை சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை சிறுபான்மையி னர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர் களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அவர்அறிவுறுத்தினார். இதே போல் நல்லான்பிள்ளை பெற்றாள், கெங்கவரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுமருத்துவமனைக்கு உட்பட்ட கிராமங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்ட றிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். காய்ச்சல் அதிகம் உள்ள கிராமங்களில் மருத்துவ குழுவினர் சிறப்பு முகாம் அமைத்து பரிசோதனைகளை அதிகப்படுத்திட வேண்டும். நோய்தொற்று கண்டறிந்த உடன்அவர்களை மேல்சிகிச்சையில் அனுமதிக்க வேண்டும்.

நோய் தொற்று பாதிக்கப்பட்ட கிராமங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் எனஅறிவுறுத் தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்