ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் - 79 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது :

ஒடிசா மாநிலத்தில் இருந்து 79.30 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் இரண்டாவது எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வழியாக வாடிப்பட்டிக்கு வந்தது.

கரோனா நோயாளிகளுக்காக வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தென் மாவட்டங்களுக்கான இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை அருகே உள்ள வாடிப்பட்டிக்கு நேற்று வந்தது. இதில் 5 டேங்கர்களில் மொத்தம் 79.30 டன் ஆக்சிஜன் வந்துள்ளது. வாடிப்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து டேங்கர் லாரிகள் இறக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை மற்றும் பிற சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்