ராமநாதபுரம் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் 9 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக முன்களப் பணியாளர்கள் அதிகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் காவல்துறையில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 20 மருத்துவர்கள், 40 செவிலியர் களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்தில் 7 பேர், ராமேசுவரம் நிலையத்தில் ஒருவர், கமுதி நிலையத்தில் ஒருவர் என 9 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் சிலருக்கு மருத்துவமனையிலும், மற்றவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தியும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago