ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில், 5 அரசு மற்றும் 5 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கை வசதிகள், 234 சாதாரண படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளைப் பொருத்தவரை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 190 படுக்கைகள், சாதாரண படுக்கைகள் 115 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இதில், அனைத்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. கரோனா நோயை தவிர்த்து பிற நோய்கள் குறிப்பாக சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு மாதத்துக்கான மாத்திரைகள் அனைத்தும் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாலாஜா அரசு தலைமை மருத் துவமனையில் டயாலசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றை எதிர்க்க ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கரோனா தொடர்பான அவசர உதவி தேவைப்பட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 04172-273166 அல்லது 273188 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago