உலக தேனீக்கள் தினத்தை யொட்டி, தேனீ வளர்ப்பு குறித்த இணைய வழி பயிற்சியை வேளாண்விஞ்ஞானிகள் வழங்கினார்கள்.
கரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் சிறிய முதலீட்டில், தங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகபொங்கலூர் பயிற்சி நிலையம் சார்பில் இணைய வழி பயிற்சி நடைபெற்றது. நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நா.ஆனந்தராஜா தொடங்கிவைத்தார்.
பயிர் பாதுகாப்பு விஞ்ஞானி பி.ஜி.கவிதா பேசும்போது, "தேனீக்கள் இல்லாவிட்டால், இவ்வுலகில் மனித இனம் இல்லை. தேனீ வளர்ப்பு, சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும். நாட்டில் மலைத் தேனீ, சிறு தேனீ, இந்தியத் தேனீ, ஐரோப்பா தேனீ ஆகிய 4 வகை உள்ளன. தேனீ வளர்க்கும் இடம், நல்ல வடிகால் வசதியுடன் திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்துக்கு அருகிலும், நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும். சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது மிகவும் அவசியம். தேனீக்கள் கூட்டுக் குடும்ப மாக வாழும் குணம் கொண்டவை. தேனீ வளர்ப்பு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவு. கூடுதல் வளர்ப்புக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடலாம்.
தேனீ வளர்ப்புக்கு குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனம் தேவை. ஐந்து பெட்டிகள்வைப்பதற்கு முதலீட்டு செலவுரூ.12,000. ஓராண்டில் ஒரு பெட்டிக்கு15 கிலோ வீதம் ஐந்து பெட்டி களுக்கு மொத்தம் 75 கிலோ கிடைக்கும். கிலோ 300-க்கு விற்கும்போது, ரூ.22,500 கிடைக்கும்.அதுமட்டுமின்றி தேன் மெழுகுஅனைத்தும் சேர்த்து, முதலாம் ஆண்டில் வருமானம் ரூ.42,000-ம்கிடைக்கும்.தேனீ வளர்ப்பதால்,தென்னந்தோப்புகளில் 30 சதவீதமும், காய்கறி பயிர்களில் 40 சதவீதமும் மகசூல் அதிகமாகிறது" என்றார்.
இந்த இணைய வழி பயிற்சியில், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், இல்லத்தரசிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago