மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் நேற்று கூறும்போது, "திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வர் (டீன்) அறிவிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு மேலாகியும் பொறுப்பேற்காமல் இருக்கிறார். கரோனா பெருந்தொற்று காலத்தில், இவர் பொறுப்பேற்க கால தாமதமாவதால் சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது கரோனா தொற்று சிகிச்சைக்கு பலர் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உரிய ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டவும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த இக்கட்டான தருணத்தில் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டவர் உடனடியாக பொறுப்பேற்க வேண்டியது அவசியம். ஆனால், தமிழக அரசு கடந்த 16-ம் தேதி இடமாற்றம் அறிவித்த பின், இங்கிருந்த முதல்வர் மாறுதலாகி சென்றுவிட்டார். ஆனால் 4நாட்களாகியும் புதிய முதல்வர் இன்னும் பொறுப்பேற்கவில்லை.
சுகாதாரத் துறையினரிடம் விசாரித்தபோது இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் தலையிட்டு,மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் உடனடியாக பொறுப்பேற்கவும், சுகாதாரப் பணிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago