18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி - செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 28,000 டோஸ் ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், வருவாய், காவல் துறையினர் உள்ளிட்ட 2.90 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 23,500 டோஸ் கோவிஷீல்டு, 4,500 டோஸ் கோவாக்சின் என மொத்தம் 28 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்த விருப்பம் தெரிவித்து, ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கெனவே 100 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 15 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. தடுப்பூசி போட வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், இதற்கான மையங்களும் அதிகரிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்