கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - கரோனா விதிகளை மீறியதாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 10,441 வழக்குகளை மாவட்டக் காவல்துறை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை அதிகமாக பரவி வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த மாவட்டக் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் என அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 9,866 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 575 பேர் மீது என 10,441 வழக்குகள் பதிவு செய்து, ரூ.22 லட்சத்து 60 ஆயிரத்து 700 அபராதத் தொகையாக விதித்துள்ளனர். கட்டுப்பாடுகளை மீறி காரணமின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 436 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கரோனா ஊரடங்கு காலத்திலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக 77 வழக்குகள் பதிவு செய்து, 1,410 லிட்டர் கள்ளச் சாராயமும், 350 லிட்டர் மதுபாட்டில்களும், 20,680 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களையும் கைப்பற்றி அழித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்