காட்பாடி அடுத்த முத்தமிழ் நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான உணவகத்தில் சிலர் சட்டவிரோதமாக லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காட்பாடி காவல் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு சுமார் 16 பேர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 16 பேரிடம் இருந்தும் 207 வெளி மாநில லாட்டரி சீட்டின் எண்களை பதிவுடன் ஜெராக்ஸ் எடுத்த துண்டு சீட்டுகளும் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், லாட்டரி சீட்டு விற்றதாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசந்திரன், ரமேஷ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், காட்டன் சூதாட்டத்தில் பணம் கட்ட வந்த 13 பேருக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago