திருப்பூர் ஏஐடியுசி பனியன் சங்க அலுவலகத்தில், அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில்நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஏஐடியுசி பனியன் சங்கப் பொருளாளர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கரோனா தொற்று பரவலைத் தடுக்க மே 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தநிலையில், திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளில் பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில், உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தனர்.
ஆனால் இன்றுவரை உற்பத்தி நிறுத்தப்படாமல், பனியன் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இவற்றை நிறுத்த உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகளும், மருத்துவமும் கிடைக்காதோ என்ற அச்சத்தில்மக்கள் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளதிருமண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகள், செயற்கை சுவாசக் கருவிகள் கொண்ட சிறப்பு முகாம்களை மேலும் அதிகப்படுத்த வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் நவீன வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகளை உடனடியாக உருவாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக முதல்வர் மற்றும் ஆட்சியர் ஆகியோருக்கு மின்னஞ்சலில் தீர்மானத்தின் நகல் அனுப்பி வைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago