விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட வளவனூர் அரசு மருத்துவமனையில் லட்சுமணன் எம்எல்ஏ நேற்று முன்தினம் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது டாக்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் போதிய இடவசதி உள்ளதாகவும், தற்போது 28 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. எனவே கூடுதலாக 50 படுக்கை வசதி கொண்ட கட்டிடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஏன் மேற்கொள்ளவில்லை? பிசிஆர் டெஸ்ட் ஏன் எடுக்கவில்லை? என்றும் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். அருகிலுள்ள சிறுவந்தாடு, கோலியனூர் மருத்துவமனைக்கு செல்வதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மூலம் இங்கு தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், கூடுதல் மருத்துவ கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.அதைத்தொடர்ந்து வளவனூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago