பரமக்குடியில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீஸார் கண்காணித்தனர்.
கரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து தமிழகத்தில் மே 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட் டுள்ளது. காலை 6 மணி முதல் 10 வரை காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பால் விற்பனை மட்டும் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த நேரத்தைத் தவிர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட நகர் பகுதிகளில் கரோனா தாக்கம் குறித்த விழிப்புணர்வு இன்றி பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.
போலீஸார் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர். இருந்தபோதும் வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் நகர் பகுதிகளில் சுற்றுகின்றனர். அதனால் அனைத்து சாலைகளையும் கண்காணிக்கும் வகையில் பரமக்குடியில் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் போலீஸார் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு அதன் மூலம் கண்காணித்தனர். இக்கேமரா ஐந்துமுனைப் பகுதியில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளைக் கண்காணித்து படம் பிடித்தது. இக்கண்காணிப்பின் மூலம் ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago