தஞ்சாவூரில் கள்ளச் சந்தையில் - ரெம்டெசிவிர் விற்க முயன்ற 3 பேர் கைது :

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புல னாய்வுத் துறை காவல் ஆய் வாளர் கோட்டைச்சாமி, உதவி ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு சந்தேகத் துக்கிடமான வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வரும், காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரைச் சேர்ந்த கிஷோர்குமார்(20), அவரது நண்பர்களான அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மேலமைக்கேல்பட்டியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் கிறிஸ்டோபர் (20), தஞ்சாவூர் ஞானம் நகரைச் சேர்ந்த லோகநாதன் மகன் கார்த்திக்(20) ஆகியோர் என்ப தும், அவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து ரெம்டெசிவிர் மருந்து அடங்கிய 7 குப்பிகளை போலீஸார் பறி முதல் செய்தனர்.

விசாரணையில், கிஷோர்குமார், தான் வேலை பார்க்கும் தனியார் மருத்துவமனையிலிருந்து இம் மருந்துகளை எடுத்து வந்து கள்ளச் சந்தையில் விற்க முயன்றுள்ளார். ஒரு குப்பியின் விலை ரூ.1,500 என உள்ள நிலையில், அதை கள்ளச்சந்தையில் ரூ.23,000-க்கு விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரும் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE