வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. முதற் கட்டமாக வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, வேலூர் மீன் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் சில்லறை மீன் வியாபாரத்தையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து, மாற்று இடம் தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இதையடுத்து, வேலூர் மீன் மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த சில்லறை மீன் வியாபாரம் ஆடு தொட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, ஆடு தொட்டி பகுதியில் சில்லறை மீன் வியாபாரம் நேற்று முதல் இயங்கத்தொடங்கியது. அங்கு சமூக இடைவெளியை பின்பற்றி மீன் கடைகளை அமைக்கவும், வாடிக்கையாளர்கள், மீன் வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தபடி வியாபாரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்த நேர கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago