வேலூர் மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை சார்பில் 10 நடமாடும் காய்கறி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பொது மக்களுக்கு தேவையான பொருட்களை அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைகளில் வாங்கிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. இருப்பினும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்க அதிக அளவில் கூடுவதால் கரோனா பரவல் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
எனவே, இதை தவிர்க்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய 10 நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கிய காலத்தில் வேலூர் மாவட்டத்தில் 8 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100-க்கும், 12 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.150-க்கும் பொதுமக்கள் இடத்துக்கு சென்று நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த காய்கறி தொகுப்பில் வெங்காயம், தக்காளி, கத்திரிக் காய், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பில்லை, ஒரு கட்டு கீரை, பாகற்காய், முள்ளங்கி,வெண்டைக்காய் உள்ளிட்டவை கள் இருந்தன. தற்போது கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கரோனா பரவல் அதிக ரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் அன்றாட தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வந்து செல்லும் போது கரோனா தொற்றுக்கு ஆளாகி விடுகின்றனர். அதேபோல, விவசாயிகள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதில் பெரும் சவால்களை சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு 10 நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி, பழங்களை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முதற் கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பொதுமக்களின் இருப்பிடங் களுக்கே நடுமாடும் காய்கறி வாகனங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால் அன்று விற்பனை இல்லை. எனவே, பொதுமக்கள் வாரத்தில் 6 நாட்களுக்கு தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி வகைகளை நடமாடும் வாகனங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago