திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற் றால் பெற்றோர் இருவரும் பாதிக்கப்பட்டு அல்லது இழந்து ஆதரவின்றி தவிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக தங்கு மிடம், உணவு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள் செய்யப் படுவதாக, சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள், கல்வி, தங்குமிடம், உணவு ஆகிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. தற்காலிக அல்லது நிரந்தர பாதுகாப்பு வசதிகள் செய்துதரப்படுவதுடன், மருத்துவ வசதிகளுக்கும் பரிந்துரை செய்யப் படும்.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 633, 6-வது தளம், ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் 0421-2971198 என்ற முகவரியிலோ, 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago