திருப்பூர் மாவட்டத்தில் கரோனாதொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சிகிச்சை மேற்கொண்டவர்களில் 4 ஆண்கள், இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
சிலரது உடலில் பல்வேறு இணை நோய்களுடன் கரோனா தொற்றும் இருந்ததால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1561-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, இது மாவட்டத்தில் அதிகபட்ச ஒருநாள் தொற்று எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago