கரோனா தொற்று பேரிடர் தடுப்பு பணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவி மையம் மூலமாக இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள், 20 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரோனா தடுப்பு உதவி மையம் சார்பில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் தலைமை வகித்தார். கரோனா தடுப்பு உதவி மைய அமைப்பாளர்கள் செ.முத்துக்கண்ணன், கே.ரங்கராஜ், ஆர்.குமார், ஆர்.மைதிலி, சம்சீர் அகமது மற்றும் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார், மாநகர் நல அலுவலர் மருத்துவர் பிரதீப் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்த தானக் கழகம் சார்பில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு 270 லிட்டர் ரத்த மாதிரிகள் சேமிப்புக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பில் குளிர்சாதன பெட்டி வழங்கப்பட்டதுடன், தொற்றாளர்களை உடனடியாக மருத்துவ உதவி மையங்கள் மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான 20 சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. தொற்றாளர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள், அவர்களது உறவினர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கித் தருவது, உணவு பார்சல்கள் வாங்கித் தருவது ஆகிய பணிகளில்30 தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
பட விளக்கம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு பணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago