திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களில் - ஊரடங்கு விதி மீறியவர்கள் மீது 484 வழக்குகள் பதிவு : 332 வாகனங்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 3 நாட்களில் ஊரடங்கு விதியை மீறியவர்கள் மீது 484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24-ம் தேதி வரை தொடர உள்ள இந்த ஊரடங்கின் போது, திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர், மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள், அத்தியாவசிய தேவையில்லாமல் வீணாக வாக னங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது, ஊரடங்கு விதியை மீறியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதோடு, வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 15 முதல் 17-ம் தேதி வரையான 3 நாட்களில், ஊரடங்கு விதியை மீறி, கரோனாவை பரப்பும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் வீணாக சுற்றித் திரிந்தவர்களின் மீது 484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், 332 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என, மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்