விழுப்புரத்தில் கரோனா நிவாரண நிதியாக ரூ.78.40 லட்சம் அளிப்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதியை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் பொதுமக்களிடம் திரட்டினர். அந்தவகையில் விழுப்புரம் இஎஸ் கல்விக் குழுமம் மற்றும் மருத்துவமனை சார்பில் ரூ.50 லட்சமும், மகாலட்சுமி பிளாஸா ரூ.1 லட்சமும், மயிலம் பொம்மபுரம் ஆதினம் சார்பில் ரூ.50 ஆயிரம் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என ரூ.78,40,417 ரொக்கமாகவும், காசோ லையாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரிடம் நேற்று வழங்கினர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது:

நாளையும் (இன்று) கரோனா நிவாரண நிதி பெறப்படும். அரசு ஊழியர்கள், சங்கங்கள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாளையோடு ரூ.1 கோடி நிதி பெறப்படும் என நம்புகிறேன். இந்த நிதியை நாளை மாலை நானும், அமைச்சர் மஸ்தானும் முதல்வரிடம் வழங்க உள்ளோம் என்றார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் தேமுதிக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையிலான தேமுதிகவினர் ஆட்சியர் அண்ணாதுரையிடம் ரூ.55,555-ஐ கரோனா நிவாரண நிதியாக வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்