நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கலன்களை உடன டியாக அனுப்பி வைக்க வேண்டும் என நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், முதல் வருக்கு அனுப்பி உள்ள கடிதத் தில் தெரிவித்துள்ளது:
கரோனா வைரஸ் தொற்று பரவலின் 2-ம் அலை தீவிரமாகி வரும் நேரத்தில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு மூலம் சிகிச்சை பெற, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையே பெரிதும் நாட வேண்டியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கீழையூர், திருக்குவளை, வேதாரண்யம், திருமருகல் ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே உள்ளன. உயர்தர சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனை இல்லாததால், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமே கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவு மூலம் சிகிச்சை அளிக்கக்கூடிய பெரும் தனியார் மருத்துவமனைகளும் நாகப்பட்டினம் நகரில் இல்லை என்பதால், மாவட்ட மருத்து வமனையில் சேரும் நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, மூச்சுத் திணறலால் அவதிப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்க முடியாத பட்சத்தில், நாகை மாவட்ட ஆட்சியர் மூலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உதவியுடன் காரைக்காலில் இருந்து ஆக்சிஜன் கலன்களை பெற்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல, திருவாரூர் மாவட் டத்திலும் உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில், ஊரக அரசு மருத்துவமனைகள் இல்லாததாலும், நகரப் பகுதியிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கக்கூடிய பெரிய தனியார் மருத்துவமனைகள் இல் லாததாலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை பகுதி சுற்றுவட்டார மக்கள் மட்டுமல்லாது, மன்னார்குடியிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நீடாமங்கலம், வலங்கைமான் பகுதி மக்களும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சேர்ந்து வருகின்றனர். இதனால், இங்கும் ஆக்சிஜன் தேவைப் படுவோருக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, நாகை, திருவாரூர் மாவட்ட மக்களின் நலன் கருதி உடனடியாக ஆக்சிஜன் கலன்களை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago