தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - ஆக்சிஜன் படுக்கைக்காக கரோனா தொற்றாளர்கள் காத்திருப்பு :

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பியதால், கரோனா தொற் றாளர்கள் பல மணிநேரம் காத்தி ருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத் தொடக்கத்தில் ஏறத்தாழ 800 என இருந்த நிலையில், மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட அளவாக நேற்று முன்தினம் 1,019 ஆக அதிகரித்தது. இதனால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்றாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இதேபோல, தஞ்சாவூர் மாவட் டத்தைச் சுற்றியுள்ள திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங் களிலிருந்தும் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கரோனா தொற்றாளர்களின் வருகை மிக அதிகமாக இருக்கிறது.

இதில், பெரும்பாலான கரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படுகிறது. ஆனால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பி விட்டதால், இருக்கிற நோயாளிகள் குண மடைந்து, சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ மட் டுமே அப்படுக்கைகள் காலியாகின் றன. தொற்றின் வீரியம் அதிகமாக இருப்பதால், படுக்கைகள் காலி யாவதற்கான வாய்ப்புகள் குறை வாக இருக்கின்றன.

இதனால், தஞ்சாவூர் மருத் துவக் கல்லூரிக்கு ஆக்சிஜன் தேவையுடன் ஆம்புலன்ஸ் வாக னங்களில் வரும் நோயாளிகள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்கெனவே நிரம்பிவிட்ட நிலை யில், நேற்று 20-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்களில் வந்த கரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் பல மணிநேரம் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆக்சிஜன் பொருத்தப்பட்ட நிலையில் காத்துக்கிடந்தனர். சில ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன் அளவு குறைந்து வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக் குமாறு உறவினர்கள் வலியுறுத்தி வந்தனர். பின்னர், சில படுக்கை கள் காலியானதைத் தொடர்ந்து, படிப்படியாக அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறும்போது, “தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடைய 677 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அரசு ராசா மிராசுதார் மருத்து வமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 320 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆக்ஸிஜன் குழாய் இணைப்பு வழங்கும் பணியும் நேற்று நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்த படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

மேலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சி ஜன் வசதியுடன் கூடிய 500 படுக் கைகள் கூடுதலாக அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணி இந்த வாரத்துக்குள் முடிந்துவிடும்” என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்