கரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி - ஆரணியில் மரத்தடியில் நோயாளிகளுக்கு சிகிச்சை : பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஆரணியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தனியார் கிளினிக் முன்பு மரத்தடியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தி.மலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பலர், கரோனா பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆரணி பழையபேருந்து நிலையம் அருகே செயல்படும் தனியார் கிளினிக் ஒன் றில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த கிளினிக்கில் உள்ள சிறிய அறைகள் நிரம்பியதால், மரத்தடியில் படுக்கையை தயார் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காலி இடத்தில் கூடாரம் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது.

பொதுவெளியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்படு வது, பாதுகாப்பற்றது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது, “இதன்மூலம் மற்றவர் களுக்கும் எளிதாக தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தகுந்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதியை ஏற்படுத்திக் கொடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சையை தொடர வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையில், சிகிச்சை அளிக்கப்படும் பகுதியை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது, இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE