வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தற்காலிக மையத்தில் 28 படுக்கை களுடன் கூடிய கரோனா சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்கும் வகையில் 910 படுக்கைகள் கொண்ட வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதில், 203 சாதாரண படுக்கைகள் கொண்ட வார்டும், ஆக்சிஜன் வசதியுடன் 524 படுக்கைகள் வார்டும், ஐசியு வசதியுடன் 183 படுக்கைகள் வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகளில் இருந்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பலர் சிகிச்சைக்கு வருவதால் படுக்கைகள் கிடைக்காமல் உள்ளது. எனவே, படுக்கைகளின் எண்ணிக்கையை ஒரு பக்கம் அதிகரித்தாலும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்காக, மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக இரும்பு தகடுகளைக் கொண்ட கூடாரம் அமைத்துள்ளனர். அங்கு, 28 படுக்கைகளை புதிதாக ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வி கூறும்போது, ‘‘வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந் திரங்கள் (கான்சன்டிரேட்டர்) உள்ளது. இதில், 28 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை தற்காலிக மையத்தில் பயன்படுத்த உள்ளோம்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago