காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பியுள்ள நிலையில் உரிய சிகிச்சை கிடைக்காமலும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமலும் நோய் முற்றிய நிலையில் பலர் இறக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் தற்போதுதினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். காஞ்சிபுரம் நகரம், குன்றத்தூர், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா மிக வேகமாக பரவி வருகிறது. ஆரம்ப நிலையில் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்து திடீரென பலருக்கும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவைஏற்படும் நிலையில், ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாமல் மக்கள்அவதியுற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 235 படுக்கைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் நிரம்பிவிட்டன. இதுபோல் மாவட்டம் முழுவதும் தனியார் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இல்லை. இதனால் சிகிச்சைக்காக மக்கள் போராட வேண்டியுள்ளது.
கரோனா முதல் அலையின்போது வயது முதிர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது நடுத்தர வயது உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. தினந்தோறும் 15 முதல் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கரோனா கணக்கில் வராமலும் பல மரணங்கள் நிகழ்கின்றன. இதில் நடுத்தர வயதினரும் அதிகம் உள்ளனர்.
கரோனா தொற்றால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படும் இந்தச்சூழ்நிலையில் உரிய சிகிச்சை இல்லாமல் வேறு சில நோய் பாதிப்புக்கு உள்ளான பலர் இறக்கின்றனர். எனவே, உடனடியாக அரசுமருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கரோனா தொற்றால் பலர்பாதிக்கப்படும் சூழ்நிலையில் உரிய சிகிச்சை இல்லாமல் வேறு சிலநோய் பாதிப்புக்கு உள்ளான பலர் இறக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago