பரமக்குடியில் தன்னார்வலர்கள் மூலம் : பழங்குடியின மக்களுக்கு இலவச உணவு :

By செய்திப்பிரிவு

பரமக்குடி வைகை ஆற்று பகுதியில் பழங்குடியின மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

இவர்கள் கரோனா ஊரடங்கால் சிரமப்படுவதை அறிந்த இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் லிவர்பூல் வாழ் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் ஆகிய அமைப்பினரால் நடத்தப்படும் லிவர்பூல் தமிழ்க் கூடத்தின் நிதியுதவியுடன், பரமக்குடி பசுமை வைகை இயக்கம் மூலமாக ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் இரண்டு வேளையாக முட்டையுடன் பகல், இரவு உணவை அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே சமைத்து வழங்குகின்றனர்.

இப்பணியை தி.ராஜா, பசுமை வைகை இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்களான மணல் சிற்பக் கலைஞர் சரவணன், கோபாலகிருஷ்ணன், மைதீன், காரிச்சாமி, மரங்கள் முருகேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்