மருத்துவமனைகளில் பணியாற்றும் - அவுட்சோர்சிங் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் : காலமுறை ஊதியம் வழங்கவும் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மருத்துவமனைகளில் பணியாற் றும் அவுட்சோர்சிங் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட சிஐடியு செயலாளர் டி.முருகையன், தமிழக முதல்வர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்துள்ளது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் மாவட்ட மருத்துவ மனைகளில், கடந்த 8 ஆண்டுக ளுக்கும் மேலாக மாதந்தோறும் ரூ.6 ஆயிரம், ரூ.8ஆயிரம் என சொற்ப ஊதியத்தில் அவுட்சோர்சிங் முறையில், இளைஞர்கள், இளம்பெண்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள்.

அவுட்சோர்சிங் ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம், வார விடுமுறை, ஓய்வு அறை உள்ளிட்டவை கிடையாது. மேலும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த சட்டக் கூலி கூட இவர் களுக்கு வழங்கப்படவில்லை. பணியின்போது, உடல் நலக் குறைவு ஏற்பட்டு இறந்தால் எந்தவித நிவாரண உதவியும் கிடையாது.

நிரந்தர பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் இவர்கள்தான் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டது முதல் அவுட்சோர்சிங் ஊழியர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், ஓய்வு இல்லாமல், நோயாளிகளின் ஆரோக்கியத்தை மட்டுமே கவ னத்தில் கொண்டு பணியாற்றி வருகின்றனர். எனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, அரசு மருத்துவமனை களில் பணிபுரியும் அவுட்சோர்சிங் ஊழியர்களை, முன்களப் பணியா ளர்களாக அறிவித்து, சிறப்பூதியம் உட்பட மற்ற சலுகைகளையும் அறிவித்து, அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்