திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் முன்பு உதவி மையம் அமைத்து நோயாளிகளின் நிலை குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவவலர் லட்சுமி பிரியா தெரிவித்தார்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவ லராக வணிக வரித் துறை இணை ஆணையர் லட்சுமி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், கரோனா உள்நோயாளிகள் பிரிவு, காய்ச்சல் பரிசோதனை மையம், ஆக்சிஜன் வசதியுடன் உள்ள படுக்கைகள், சுவாசநோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கான சிகிச்சை பிரிவு, கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு, ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். அதன்பிறகு, வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசின் கரோனா நிவாரண தொகையை மக்களுக்கு வழங்கினார்.
இதையடுத்து, தி.மலை நகரம் போளூர் சாலை தந்தை பெரியார் நகர், அஜீஸ் காலனி மற்றும் நல்லவன்பாளையத்தில் நடைபெற்று வரும் கரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதி, திருமஞ்சன கோபுர வீதியில் உள்ள திருமண மண்படத்தில் வணிகர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர், தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்படும் ஆக்சிஜன் பிரிவு மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தண்டராம்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கரோனா பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, திருவண் ணாமலை ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த முகாமில் கரோனா பரிசோதனையும் செய் யப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிய வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் தன்மைக்கு ஏற்ப மருத்துவமனை அல்லது பராமரிப்பு மையம் அல்லது வீட்டில் தனிமைப்படுத்துதல் என அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 150 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தேவை இல்லாமல் வெளியே வரக்கூடாது. காலை 10 மணிக்கு பிறகு யாரும் வெளியே வர வேண்டாம். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் கடினமாக நடந்து கொள்ளாமல் அறிவுரை வழங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் செய்யப் படுகிறது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் போதியளவு ஆக்சிஜன் உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் 400 படுக்கை வசதிகள் உள்ளன.
ஆக்சிஜன் சிலிண்டர்களும் கையிருப்பில் உள்ளன. 3 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. அரசு மருத்துவமனைகள் முன்பு உதவி மையம் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட் டுள்ளது. அந்த உதவி மையம் மூலமாக நோயாளிகள் குறித்த நிலையை உறவினர்கள் அறிந்து கொள்ளலாம்.
இதன்மூலம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதிக்கு உறவினர்கள் செல்வதை தவிர்க்கப்படும்” என்றார். அப்போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago