ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு :

By செய்திப்பிரிவு

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி அரசு மருத்துவமனை, வளத்தி மற்றும் மேல்மலையனூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார்

செஞ்சி அரசு மருத்துவ மனையில் ஆய்வு செய்தபோது, கரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளுக்குத் தேவையான உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்

தொடர்ந்து வளத்தி, மேல்மலையனூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கிராமங்களில் நோய் பரவலை தடுக்கும் வகையில் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகளவில் மக்களிடத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார் அப்போது, மேல்மலையனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுப்புற சுவர் கட்டி தர வேண்டும் என அங்கிருந்த மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

ஆலம்பூண்டி ரங்கபூபதி மருத்துவக் கல்லூரியில் அரசு சார்பில் கோவிட் கேர் சென்டர் 100 படுக்கை வசதியுடன் செயல்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இப்பணியை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். இம்மருத்துவமனையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் ராஜன், செஞ்சி மருத்துவமனை மருத்துவர் சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்