கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்கரோனாவுக்கு 12 பேர் உயிரிழப்பு : இதுவரை 556 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 488 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் 26,098 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 417 பேர் உட்பட இதுவரையில் 22,600 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை 157பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 853 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரையில் 38,062 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். இதுவரை 399 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 521 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரையில்15,846 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்